×

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் நடைமேடை தடுப்பு கதவுகள்: சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் ரூ.100 கோடி மதிப்பில் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கபப்டும் என சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தகவல் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II ன் கீழ் வழித்தடம் 3, 4 மற்றும் 5-ல் அமைக்கப்படும் அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களின் நடைமேடைகளிலும் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்க திட்டமிட்டுள்ளது.

இதில் வழித்தம் 4-ல் ரூ.100 கோடி மதிப்பில் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கபடவுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அமைப்புகள் மற்றும் இயக்கம் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி மேலும் தெரிவித்துள்ளதாவது:- முதல் கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4-ல் மெட்ரோ ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் M/s Zhuzhou CRRC Times Electric Co. என்ற நிறுவனத்திற்கு ரூ.100 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு புதிய மேம்பாட்டு வங்கி நிதியளிக்கிறது. இந்த ஒப்பந்தத்தில், வழித்தடம் 4-ல் பூந்தமல்லியில் இருந்து கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையிலான 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதி உயரத்திலான நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்க மற்றும் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் வரையிலான 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு உயரத்திலான நடைமேடை தடுப்பு கதவுகள் அமைக்கும் பணிகள் இதில் அடங்கும்.

ஒட்டுநர் இல்லாத சிக்னலிங் அமைப்பு மூலம் நடைமேடை தடுப்பு கதவுகள் தானாகவே இயக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2ல் மீதமுள்ள வழித்தடம் 3 மற்றும் 5-ல் மெட்ரோ ரயில் நிலையங்களின் நடைமேடைகளில் நடைமேடை தடுப்பு கதவுகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யும் பணி செயல்பாட்டில் உள்ளது.

Tags : Chennai Metro ,Chennai ,Metro Rail ,Rajesh Chaturvedi , Platform barrier doors on Chennai Metro Rail Project Phase-2 Route 4: Chennai Metro Rail Director Rajesh Chaturvedi Information
× RELATED சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல்...